குட்டியானை சாவு


குட்டியானை சாவு
x
தினத்தந்தி 11 Feb 2022 7:56 PM IST (Updated: 11 Feb 2022 7:56 PM IST)
t-max-icont-min-icon

குட்டியானை சாவு

கூடலூர்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியில் மசினகுடி, சிங்காரா, சீகூர் உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளது. இங்கு காட்டுயானைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் சிங்காரா வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது நார்தன் ஹே வனப்பகுதியில் நீரோடை கரையில் பிறந்து ஒரு மாதம் மட்டுமே ஆன ஆண் குட்டியானை இறந்து கிடப்பதை கண்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண்குமார் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் கால்நடை டாக்டர் கண்ணன் வரவழைக்கப்பட்டு குட்டியானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து முக்கிய உடற்பாகங்கள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டது. குட்டி யானை இறந்த காரணம் தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே இறப்புக்கான விவரம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story