முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
உடன்குடியில் முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
உடன்குடி:
கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப்புக்கு ஏதிராக நடைபெற்ற சம்பவத்தையொட்டி மத்திய மற்றும் கர்நாடகா அரசுகளைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் உடன்குடி சந்தையடித்தெருவில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் அசாருதீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் சுலைமான், மாவட்ட பொருளாளரர் ரஹ்மான், உடன்குடி கிளைத் தலைவர் தௌலத்துல்லா, குத்புதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலர்கள் தாவூத் கைசர், யூசுப் அலி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். மாவட்ட செயலர் இம்ரான் நன்றி கூறினார். இதில் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story