வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது
ஓட்டப்பிடாரம் அருகே வீடு புகுந்து திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குருக்குசாலை சேர்ந்த சோலையப்பன்ரெட்டியார் மகன் முருகன் (வயது 72). டெய்லர். இவரும், மனைவியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்றனர். மதியம் சாப்பிடுவதற்காக முருகன் வந்தபோது, மர்மநபர் அவரது வீடு புகுந்து பணம், பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து எப்போதும்வென்றான் அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டி சேர்ந்த பெருமாள் மகன் முருகன் (27) என்பவரை கைது செய்தனர். இவர் ஏற்கனவே, கீழதட்டாப்பாறையில் ஒரு வீட்டில் கதவை உடைத்து செல்போன் மற்றும் ரூ. 7 ஆயிரம் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். இவரிடம் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story