கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
திருவாரூர் மாவட்டத்தில் நாளை(12.2.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி அறிவித்துள்ளார்.
திருவாரூர்,
மன்னர் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி திருவாரூரில்; நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்த மழை தொடர்ந்து கனமழையாக பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை (12.2.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story