திருவந்திபுரத்தில் ஒரே நாளில் 120 ஜோடிகளுக்கு திருமணம்
திருவந்திபுரத்தில் ஒரே நாளில் 120 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
நெல்லிக்குப்பம்,
கடலூர் அருகே திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. வழக்கமாக முகூர்த்த நாட்களில் அதிகளவில் திருமணங்கள் நடைபெறும். தற்போது கொரோனா பரவல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவில் முன்பு உள்ள மலை மீது வைத்து திருமணம் நடத்த இதுவரை அனுமதி அளிக்கவில்லை.
இருப்பினும் கோவில் முன்பு உள்ள சாலையில் வைத்து திருமணங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தை மாத கடைசி முகூர்த்தம் என்பதால் தேவநாத சுவாமி கோவிலில் அதிகளவில் திருமணங்கள் நடைபெற்றது.
120 ஜோடிகளுக்கு திருமணம்
அந்த வகையில் நேற்று அதிகாலை 4 மணி முதல் திருமணங்கள் நடைபெறத் தொடங்கியது. இதில் கோவில் அருகே உள்ள சாலையில் அமர்ந்தே, சாமியை தரிசனம் செய்து புதுமண ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.
இதில் கோவில் சாலையில் வைத்து 80 திருமணங்களும், அந்த பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமணமண்டபத்தில் 40 திருமணங்கள் என்று நேற்று ஒரே நாளில் 120 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
இதற்கிடையே காலையில் பக்தர்கள் யாரும் காலை 8 மணிவரைக்கும் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி, பக்தர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
Related Tags :
Next Story