வேகத்தடை இல்லாததால் மாணவர்கள் அவதி
நாகூர் மெயின் சாலையில் வேகத்தடை இல்லாததால் மாணவர்கள் சாலையை கடந்து செல்வதற்கு அவதிப்பட்டு வருகின்றனர். இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நாகூர்;
நாகூர் மெயின் சாலையில் வேகத்தடை இல்லாததால் மாணவர்கள் சாலையை கடந்து செல்வதற்கு அவதிப்பட்டு வருகின்றனர். இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மாணவர்கள் அவதி
நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகிறார்கள். நாகையில் இருந்து சென்னை, புதுச்சேரி, சிதம்பரம், மயிலாடுதுறை, சீர்காழி, கும்பகோணம், காரைக்கால் உள்ளிட்ட ஊர்களுக்கு நாகூர் வழியாக பஸ்கள் அதிக எண்ணிக்கையில் சென்று வருகின்றனர்.
போக்குவரத்து மிகுந்த சாலையாக நாகூர் மெயின் சாலை இருந்து வருகிறது. நாகூர் பழைய பஸ் நிலையம் அருகில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. சாலைகளில் அதிகமான வாகனங்கள் சென்று வருவதால் தினத்தோறும் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், சாலையை கடக்க வெகுநேரமாகிறது. இதனால் மாணவர்கள் தினசரி அவதிப்பட வேண்டி உள்ளது.
வேகத்தடை
வாகனங்கள் அதிக அளவில் செல்லக்கூடிய சாலை என்பதால் இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
இதை அதிகாரிகள் கவனித்து விபத்துகளை தவிர்க்க நாகை- நாகூர் மெயின்ரோட்டில் வேகத்தடை அமைத்துத்தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story