மில் தொழிலாளி தற்கொலை


மில் தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 11 Feb 2022 10:32 PM IST (Updated: 11 Feb 2022 10:32 PM IST)
t-max-icont-min-icon

அய்யலூர் அருகே மில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வடமதுரை:
அய்யலூர் அருகே உள்ள கொன்னையம்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 19). இவர், வேடசந்தூர் அருகே உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 6 மாதங்களாக இவர், வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இருப்பினும் நோய் குணமாகவில்லை.
இதனால் மனம் உடைந்த விஜயகுமார் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக விஜயகுமாரின் தந்தை ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story