வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்


வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Feb 2022 10:39 PM IST (Updated: 11 Feb 2022 10:39 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருேக வாகன சோதனையில் ரூ.1 லட்சம் சிக்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே  மம்சாபுரம்-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் பறக்கும் படையினர் தாசில்தார் ரங்கசாமி, சப்-இன்ஸ்பெக்டர் அமுதா ஆகியோர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணிபுரிவதாக கூறினார். அவரிடம் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 40 இருந்துள்ளது. ஆனால் அந்த தொகைக்கு முழுமையான உரிய ஆவணங்கள் இல்லை. இதை தொடர்ந்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மம்சாபுரம் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், உரிய ஆவணங்களை ஒப்படைத்து விட்டு பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றனர். 

Next Story