6 ஆயிரம் மதுபாட்டில்கள் அழிப்பு


6 ஆயிரம் மதுபாட்டில்கள் அழிப்பு
x

விழுப்புரத்தில் 6 ஆயிரம் மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டது.

விழுப்புரம், 

விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2017, 2019, 2021-ம் ஆண்டுகளில் மதுவிலக்கு வழக்குகளில் மொத்தம் 6 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சமாகும். இந்த மதுபானங்களை அழிப்பதற்காக விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் அனுமதி பெற்றனர்.  இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்படி நேற்று மாலை மாஜிஸ்திரேட்டு அருண்குமார் முன்னிலையில் அந்த 6 ஆயிரம் மதுபாட்டில்களில் இருந்த மதுபானங்களும் கீழே கொட்டி அழிக்கப்பட்டது. அப்போது மதுவிலக்கு அமல்பிரிவு துைண ேபாலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டி, இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், ஏட்டுகள் சிவமணி, சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story