தபால் வாக்கு மனுக்கள் பெறும் பணி தீவிரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தபால் வாக்குகள் பதிவு செய்வதற்கான மனுக்கள் பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தபால் வாக்குகள் பதிவு செய்வதற்கான மனுக்கள் பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முன்னேற்பாடு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் இந்த தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாகவும், அச்ச மின்றி வாக்களிக்கவும் மாவட்ட காவல்துறையின் சார்பில் கொடி அணிவகுப்பு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பதற்றமான வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் போலீசார் பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். தேர்தலின்போது தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்புகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது தேர்தல்பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் வெளியூர், வெளிமாநிலங்களில் பணியாற்றுபவர்களுக்கான தபால் வாக்குகள் பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தபால் வாக்குகள்
மாநில தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், அரசு அதிகாரிகள், செய்தியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு தபால் வாக்குகள் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவர்கள் அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் தங்களின் தபால் வாக்குகளை பெற்று செலுத்தி கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதற்காக தபால் வாக்குகள் கோரும் நபர்களுக்காக அந்தந்த தேர்தல் நடத்தும் பகுதிகளில் மனுக்கள் பெறும் பெட்டிகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த பெட்டிகளில் மனு செய்யும் நபர்களுக்கு அவரவர் பணிபுரியும் நிறுவனம் அலுவலகங்கள் மூலம் தபால் வாக்குகள் வழங்கப்படும் என்றும் இதுகுறித்து விரிவான விளக்க குறிப்பு வெளியிடப்படும் என்றும் தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story