பரமக்குடியில் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் மோதல்


பரமக்குடியில் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் மோதல்
x
தினத்தந்தி 11 Feb 2022 10:53 PM IST (Updated: 11 Feb 2022 10:53 PM IST)
t-max-icont-min-icon

பரமக்குடியில் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் மோதலில் தி.மு.க. வேட்பாளரின் தந்தையை கல்லால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

பரமக்குடி, 
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி தேர்தலில் 4-வது வார்டில் தி.மு.க. சார்பில் சர்மிளா ராணியும் அ.தி.மு.க. சார்பில் சகுபானு ஜமால் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இந்தநிலையில் நேற்று மதியம் எமனேசுவரம் பகுதியில் தி.மு.க.வினர் வாக்கு சேகரித்துக் கொண்டு இருந்தனர். 
அப்போது அ.தி.மு.க.வினரும் அங்கு வாக்கு சேகரிக்க வந்துள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அ.தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தினர். இதில் தி.மு.க. வேட்பாளரின் தந்தை முகமது சேட் (வயது72) மீது கல்லால் தாக்கியதில் தலை மற்றும் கண்ணில் காயம் ஏற்பட்டது. 
அதைத் தொடர்ந்து அவரை பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து முகம்மது சேட் கொடுத்த புகாரின் பேரில் உமர் பகத் (32) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து எமனேஸ்வரம் போலீசார் கைது செய்துள்ளனர். அதேபோல் உமர் பகத் கொடுத்த புகாரின் பேரில் முகம்மது சேட், அவரது மகன் பகத்ராஜா ஆகிய 2 பேர் மீதும் எமனேசுவரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Tags :
Next Story