மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர் பெயர் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்


மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர் பெயர் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 11 Feb 2022 10:55 PM IST (Updated: 11 Feb 2022 10:55 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி நகராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர் பெயர் சின்னம் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி நகராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர் பெயர் சின்னம் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது.
சின்னம் பொருத்தும் பணி 
கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் 170 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி, பா.ம.க.. காங்கிரஸ் எஸ்.டி.பி.ஐ., மக்கள் நீதி மய்யம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 129 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
அதேபோல சுயேச்சைகள் 41 பேர் களத்தில் உள்ளனர். அவர்களுக்கு பெயர், கட்சி சின்னம், சுயேச்சைகளுக்கு வழங்கப்பட்ட சின்னங்களுடன் வார்டு வாரியாக பிரிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ெபாருத்தும் பணி நேற்று தொடங்கியது. கிருஷ்ணகிரி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆணையாளருமான முருகேசன் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார் பணிகளை பார்வையிட்டார். மண்டல அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படும் 
இது குறித்து நகராட்சி ஆணையாளர் முருகேசன் கூறுகையில், கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட, 66 ஓட்டுச்சாவடிகளுக்கான, 80 கன்ட்ரோல் யூனட், மற்றும் பேலட் யூனிட் பிரித்து வைக்கப்பட்டு அதில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. பின்னர் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் பாதுகாப்பாக அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இது தேர்தல் நடைபெறும் வருகிற 19-ந் தேதிக்கு முதல் நாள அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பப்படும் என்று கூறினார்.

Next Story