அரூரில் சமூக நல்லிணக்க மேடை அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


அரூரில் சமூக நல்லிணக்க மேடை அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Feb 2022 10:56 PM IST (Updated: 11 Feb 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

அரூரில் சமூக நல்லிணக்க மேடை அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரூர்:
சமூக நல்லிணக்க மேடை அமைப்பு மற்றும் அரூர் சுன்னத் ஜமாத் ஆகியவற்றின் சார்பில் அரூர் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்பு செயலாளர் நந்தன், திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஜெயராமன், த.மு.மு.க. மாநில பிரதிநிதி சாதிக்பாஷா, சுன்னத் ஜமாத் முத்தவல்லி ஷபீர்அகமத், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் தமிழ்குமரன், செயலாளர் அப்துல்ரவூப், தி.மு.க. நிர்வாகிகள் சூர்யா தனபால், முல்லைரவி, சென்னகிருஷ்ணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து பேசினார்கள். முஸ்லிம் மாணவிகளின் மத உரிமையை பறிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். அரசியலமைப்பு சட்டப்படி வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் முஸ்லிம் பெண்கள் கலந்து கொண்டனர்.

Next Story