இண்டூர் அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு பொக்லைன் எந்திரத்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்


இண்டூர் அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு பொக்லைன் எந்திரத்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 11 Feb 2022 10:56 PM IST (Updated: 11 Feb 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

இண்டூர் அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாப்பாரப்பட்டி:
இண்டூர் அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராமமக்கள் எதிர்ப்பு
தர்மபுரி மாவட்டம் இண்டூர் கும்பளப்பாடி அருகே உள்ள கரடிக்கல்குண்டு கொட்டாய் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தையொட்டி கல்குவாரி அமைக்க அனுமதி பெற்றுள்ளதாக கூறி பூஜை போட்டுள்ளனர். இதையறிந்த கிராம மக்கள கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவல் அறிந்ததும் இண்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாறைகளுக்கு வெடி வைப்பதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். மேலும் கல்குவாரி உள்ள இடத்தை ஒட்டி மேய்ச்சல் நிலம், விவசாய நிலம் உள்ளது. மேலும் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும்.
சுகாதார சீர்கேடு
 எனவே இந்த பகுதியில் கல்குவாரி அமைக்க கூடாது என்று  கிராமமக்கள் தெரிவித்தனர். உரிய அனுமதி பெற்று கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கல்குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story