தர்மபுரி விருபாட்சிபுரம் ராகவேந்திரர் கோவிலில் ஸ்ரீமத்வ நவமி விழா உடுப்பி சுகுனேந்திர தீர்த்தர் பங்கேற்பு
தர்மபுரி விருபாட்சிபுரம் ராகவேந்திரர் கோவிலில் நடந்த ஸ்ரீமத்வ நவமி விழாவில் உடுப்பி சுகுனேந்திர தீர்த்தர் பங்கேற்றார்.
தர்மபுரி:
தர்மபுரி விருபாட்சிபுரம் உடுப்பி புத்திகே மடக்கிளை ஸ்ரீ ராகவேந்திரர் கோவிலில் ஸ்ரீமத்வ நவமி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலை நிர்வகிக்கும் 8 மடங்களில் ஒன்றான உடுப்பி ஸ்ரீ புத்திகே மடத்தின் சுவாமிஜி ஸ்ரீஸ்ரீ சுகுனேந்திர தீர்த்தர் தலைமையில் நடைபெற்றது.
விழாவையொட்டி சுப்ரபாதம் உள்ளிட்ட பஜனையும், ராகவேந்திர சாமிக்கு பஞ்சாமிர்த அபிஷேகமும், சிறப்பு அலங்கார சேவையும் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு வழிபாடு மற்றும் உபகார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சமஸ்தான பூஜையும், ரத உற்சவமும் நடைபெற்றது. பின்னர் சென்னை லட்சுமிபதிராஜாவின் பக்தி சொற்பொழிவு நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் உடுப்பி ஸ்ரீஸ்ரீ சுகுனேந்திர தீர்த்தர் 60-வது வயதினை முன்னிட்டு துலாபாரமும், கனகப்பூஜையும் நடைபெற்றது. முன்னதாக தர்மபுரி விருபாட்சிபுரம் வந்த உடுப்பி சுகுனேந்திர தீர்த்தருக்கு பக்தர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அவர் அருளாசி வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தர்மபுரி புத்திகே மடத்தின் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story