நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பு


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 11 Feb 2022 10:56 PM IST (Updated: 11 Feb 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தர்மபுரியில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

தர்மபுரி:
நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தர்மபுரியில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
கண்காணிப்பு பணி
தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19- ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக தர்மபுரி நகராட்சி பகுதியில் 57 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 14 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தேர்தல் வாக்குப் பதிவின்போது கண்காணிப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவை அசம்பாவித சம்பவங்களுக்கு இடமின்றி அமைதியான முறையில் நடத்த தேவையான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தல் வாக்குப்பதிவிற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கொடி அணிவகுப்பு
இந்த நிலையில் தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ் மற்றும் போலீசார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு தர்மபுரி நகர பகுதியில் நடைபெற்றது. தர்மபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய இந்த கொடி அணிவகுப்பு எஸ்.வி. ரோடு, அக்ரஹார தெரு, டேக்கீஸ்பேட்டை, சந்தைப்பேட்டை, நேதாஜி பைபாஸ் ரோடு வழியாகச் சென்றது. தர்மபுரி 4 ரோடு பகுதியில் இந்த கொடி அணிவகுப்பு முடிவடைந்தது.

Next Story