போலீஸ்காரர் உள்பட மேலும் 3 பேர் கைது
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற வழக்கில் போலீஸ்காரர் உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமேசுவரம்,
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற வழக்கில் போலீஸ்காரர் உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள்
ராமேசுவரத்திற்கு இரவு நேரத்தில் பஸ்சில் வந்து இறங்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தி கிராமத்தைச் சேர்ந்த சூரியகுமார் என்ற வாலிபரிடம் தீவிர குற்றத்தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் 1½ கிலோ ஹொகைன் என்ற போதைப்பொருளை கைப்பற்றி, அவரை கைது செய்தனர். இந்த போதைப்பொருள் பலகோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்டது என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் சூரியகுமாரோடு தொடர்புடைய ராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதியை சேர்ந்த 4 பேரையும் கைது செய்தனர். அவர்கள் 5 பேரும் நேற்று ராமேசுவரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இலங்கைக்கு மேற்கண்ட போதைப்பொருளை கடத்த முயன்ற வழக்கில் மேலும் 3 பேரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
போலீஸ்காரர்
அவர்களில் ஒருவர் ராமேசுவரம் எம்.ஆர்.டி. நகரை சேர்ந்த பாலமுருகன் என்ற போலீஸ்காரர் ஆவார். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தார். எனவே இந்த வழக்கில் அவரையும், ராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதியை சேர்ந்த சந்தியா டைமண்ட், ஜோசப் ஆகியோரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இலங்கைக்கு ஹொகைன் என்ற போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடத்தல்காரர்களுடன் போலீஸ்காரர் ஒருவரும் கைதாகி இருப்பது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story