இஸ்லாமிய அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


இஸ்லாமிய அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Feb 2022 11:22 PM IST (Updated: 11 Feb 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து திருப்பூரில் இஸ்லாமிய அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர்
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து திருப்பூரில் இஸ்லாமிய அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தவ்ஹீத் ஜமாஅத்
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பைசல் கண்டன உரையாற்றினார்.
இஸ்லாமிய மாணவிகள் மூவர்ண கொடி நிறத்தில் பர்தா அணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். திரளான பெண்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் மாவட்ட செயலாளர் யாசர் அராபத், பொருளாளர் அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு
இதுபோல் ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு, ஷாஹின்பாக் போராட்டக்குழு சார்பில் திருப்பூர் சி.டி.சி. கார்னரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் ஹாலிதீன் தலைமை தாங்கினார். வக்கீல் பா.பா.மோகன், பெண் விடுதலை இயக்கத்தின் நிறுவன தலைவர் சபரிமாலா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் பெண்கள் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.

Next Story