வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி
மயிலாடுதுறை நகராட்சியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி நடந்தது. இந்த பணிகளை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை நகராட்சியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி நடந்தது. இந்த பணிகளை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.
சின்னங்கள் பொருத்தும் பணி
மயிலாடுதுறை நகராட்சியில் நகரசபை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி(சனிக்கிழமை) நடக்கிறது. இதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 211 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதோடு ஓட்டுச்சாவடிகளுக்கான எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணிகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நகராட்சி அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி நடந்தது.
சீல் வைப்பு
தேர்தல் நடத்தும் அலுவலர் பாலு முன்னிலையில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் வார்டு வாரியாக வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் அடங்கிய வாக்குச்சீட்டுகளை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணிகளை மேற்கொண்டனர். கலெக்டர் லலிதா மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது எந்திரம் சரியாக உள்ளதா என்பதை சோதனை செய்து சின்னம் பொருத்தப்பட்டு ஓட்டுப்பதிவு பூஜியத்தில் உள்ளதா? என்பதை ஆய்வு செய்து முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல்வைக்கப்பட்டு, பின்னர் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. நேற்று காலை தொடங்கிய இந்த பணி மாலை வரை நடந்தது.
சீர்காழி
சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகளுக்கு 35 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 24 வார்டுகளில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 133 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் மற்றும் பெயர்களை பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. உதவி கலெக்டர் நாராயணன் தலைமையில் சீர்காழி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆணையருமான (பொறுப்பு) இப்ராஹிம், போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் வார்டு வாரியாக ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணியை மேற்கொண்டனர். அப்போது நகராட்சி மேலாளர் காதர் கான், பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Related Tags :
Next Story