வெள்ளைக்கழிச்சல் நோயின் தாக்கத்தை குறைக்க வெயில் காலத்தில் கோழிகளுக்கு லசோட்டா தடுப்பூசி செலுத்த வேண்டும்-ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்
வெள்ளைக்கழிச்சல் நோயின் தாக்கத்தை குறைக்க வெயில் காலத்தில் கோழிகளுக்கு லசோட்டா தடுப்பூசி செலுத்த வேண்டும் என ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது.
நாமக்கல்:
வானிலை
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. இன்று முதல் 4 நாட்களுக்கு மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இன்று வடகிழக்கு திசையில் இருந்தும், நாளை முதல் 3 நாட்களுக்கு வடக்கு திசையில் இருந்தும் காற்று வீசும். அதேபோல் வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 95 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக முறையே 75, 75, 70, 70 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக முறையே 55, 55, 50, 45 சதவீதமாகவும் இருக்கும்.
மேல் மூச்சுக்குழல் அயற்சி
சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 4 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் மேல் மூச்சுக்குழல் அயற்சியால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்து உள்ளது. எனவே பண்ணையாளர்கள் தகுந்த குளிர்கால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும்.
மேலும் கோழிகளில் வெப்ப அயர்ச்சியை தடுக்க பண்ணையாளர்கள் தெளிப்பான்களை உபயோகப்படுத்த வேண்டும். அதேபோல் வெயில் காலங்களில் வெள்ளைக்கழிச்சல் நோயின் தாக்கத்தை குறைக்க கோழிகளுக்கு லசோட்டா தடுப்பூசி செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story