632 மையங்களில் கொரோனா தடுப்பூசி


632 மையங்களில் கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 11 Feb 2022 11:39 PM IST (Updated: 11 Feb 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் 632 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 632 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
632 மையங்கள்
திருப்பூர் மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள இளம் சிறார்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என 21 லட்சத்து 10 ஆயிரத்து 600 பேர் உள்ளனர். இதுவரை 20 லட்சத்து 43 ஆயிரத்து 638 பேருக்கு முதல் தவணையும், 14 லட்சத்து 42 ஆயிரத்து 920 பேருக்கு இரண்டாவது தவணையும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
66 ஆயிரத்து 962 பேருக்கு முதல் தவணையும், 4 லட்சத்து 97 ஆயிரத்து 808 பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியுள்ளது. இந்த நிலையில் 22-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) 632 மையங்களில் நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடத்தப்படுகிறது. 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி
கொரோனா 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் அல்லது 39 வாரம் ஆன சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் சிறப்பு முகாமில் போடப்படும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், சுங்கச்சாவடிகள், தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இந்த பணியில் 2 ஆயிரத்து 528 பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

Next Story