ராஜ அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர்


ராஜ அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர்
x
தினத்தந்தி 12 Feb 2022 12:00 AM IST (Updated: 12 Feb 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுகநாதர் ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி வேங்கைப்பட்டி சாலையில் சித்தர் முத்துவடுகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தை மாத கடைசி வெள்ளியையொட்டி முத்துவடுகநாதர் சித்தருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து மகா தீபம் காட்டப்பட்டது. ராஜ அலங்காரத்தில் சித்தர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளாக பக்தர்கள் சமூக இடைவெளியோடு வழிபாடு செய்தனர். சிங்கம்புணரி வேட்டையன்பட்டியில் அமைந்துள்ள காமாட்சி பரமேஸ்வரி அம்மன் ேகாவிலில் கடைசி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்பாளுக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து மலர் மாலைகளுடன் அம்பாள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.


Next Story