குமரியில் கடத்தப்பட்ட 16 வயது சிறுமி கடலூரில் மீட்பு;போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


குமரியில் கடத்தப்பட்ட 16 வயது சிறுமி கடலூரில் மீட்பு;போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Feb 2022 12:01 AM IST (Updated: 12 Feb 2022 12:01 AM IST)
t-max-icont-min-icon

முகநூலில் ஏற்பட்ட பழக்கத்தால் குமரியில் கடத்தப்பட்ட 16 வயது சிறுமி கடலூரில் மீட்கப்பட்டார். அவரை கடத்திய கடலூர் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி, 
முகநூலில் ஏற்பட்ட பழக்கத்தால் குமரியில் கடத்தப்பட்ட 16 வயது சிறுமி கடலூரில் மீட்கப்பட்டார். அவரை கடத்திய கடலூர் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
கடலூர் வாலிபர்
கடலூரை சேர்ந்தவர் முருகவேல் (வயது30). இவருக்கும், குமரி மாவட்டம் பள்ளம் கடற்கரையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. முருகவேல் ஏற்கனவே திருமணம் ஆனவர்.
இந்தநிலையில் முருகவேல் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தனது சொந்த ஊரான கடலூருக்கு கடத்தி சென்றார்.
இதையடுத்த சிறுமியை காணவில்லை என்று அவரது பெற்றோர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 
நகை பணம் எடுத்து சென்றார்
அந்த புகாரில் சிறுமி காணாமல் போகும் போது வீட்டில் இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் ஆகியவற்றை எடுத்து சென்றுள்ளதாக கூறியிருந்தனர்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். அப்போது சிறுமியை கடலூரை சேர்ந்த முருகவேல் கடத்தி சென்றது தெரியவந்தது. 
இதையடுத்து போலீசார் கடலூர் விரைந்தனர். அங்கு ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்த சிறுமியை மீட்டனர். அத்துடன் அவரை கடத்தி சென்ற முருகவேலை கைது செய்து கன்னியாகுமரிக்கு அழைத்து வந்தனர். அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story