ஈத்தாமொழி அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


ஈத்தாமொழி அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 Feb 2022 12:05 AM IST (Updated: 12 Feb 2022 12:05 AM IST)
t-max-icont-min-icon

ஈத்தாமொழி அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார்.

ஈத்தாமொழி, 
ஈத்தாமொழி அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார். 
கல்லூரி மாணவி
ஈத்தாமொழி அருகே உள்ள தெற்கு சூரங்குடி, பொட்டல் விலக்கு பகுதியைச் சேர்ந்தவர் பாபு (வயது 45), தேங்காய் வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி (42). இவர்களுக்கு ஸ்ரீதேவி (17) என்ற மகளும், அஸ்வின் (15) என்ற மகனும் உள்ளனர்.
 இதில் ஸ்ரீதேவி வீட்டின் அருகில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக ஸ்ரீதேவி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
சம்பவத்தன்று மாலையில் ஸ்ரீதேவி தாயாரிடம் வீட்டின் மாடி அறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அவர் கீழே வராததால் சந்தேகமடைந்த ராஜேஸ்வரி மாடி அறைக்கு சென்று பார்த்தார். அப்போது,  ஸ்ரீதேவி தூக்கில் தொங்கிக்கொண்டு இருப்பதை கண்டு அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.  பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஸ்ரீதேவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
சோகம்
பின்னர், இதுகுறித்து ஈத்தாமொழி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று ஸ்ரீதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி ஸ்ரீதேவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story