ராணிப்பேட்டை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி 3 நாட்கள் நடக்கிறது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி 3 நாட்கள் நடக்கிறது
x
தினத்தந்தி 12 Feb 2022 12:09 AM IST (Updated: 12 Feb 2022 12:09 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி 3 நாட்கள் நடக்கிறது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி 3 நாட்கள் நடக்கிறது. 

சின்னங்கள் பொருத்தும் பணி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. 

இதை முன்னிட்டு, வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவுக்கு  பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணியை அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் பொறியாளர்கள் மேற்கொள்ள உள்ளனர்.

3 நாட்கள்

அதன்படி, இன்று (சனிக்கிழமை) கலவை, திமிரி, விளாப்பாக்கம் பேரூராட்சிகளிலும், ஆற்காடு, மேல்விஷாரம் ஆகிய நகராட்சிகளிலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) ராணிப்பேட்டை, வாலாஜா, சோளிங்கர் நகராட்சிகளிலும், அம்மூர் பேரூராட்சியிலும், 14-ந் தேதி (திங்கட்கிழமை) தக்கோலம், நெமிலி, பனப்பாக்கம், காவேரிபாக்கம் ஆகிய பேரூராட்சிகளிலும், அரக்கோணம் நகராட்சியிலும் இப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. 
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

Next Story