வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி
திருமங்கலம் நகராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றன.
திருமங்கலம்
திருமங்கலம் நகராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றன.
சின்னம் பொருத்தும் பணி
திருமங்கலம் நகராட்சிக்கு வரும் 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த 27 வார்டுகளில் 49 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்தப்பணி வேட்பாளர்கள் முன்னிலையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த அறையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டு நகராட்சி மன்ற கூட்ட அரங்கில் வைக்கப்பட்டது.
இதைதொடர்ந்து அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அதிகாரி டேரன்ஸ் லியோன் முன்னிலையில் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தப்பட்டன. தேர்தல் நாளில் வாக்காளர்கள் வாக்களிக்கும்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏதாவது பிரச்சினை இருந்தால் மாற்று எந்திரங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எழுமலை பேரூராட்சி
எழுமலை பேரூராட்சியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் செயல் அலுவலர் சிவகுமார் தலைமையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செந்தில்குமார், பிரேம் கிஷோர், வட்டார பார்வையாளர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலையில் வட்டாட்சியர்(தேர்தல்) தெய்வம், மண்டல அலுவலர்கள் ராம்குமார் மாரிச்செல்வம் சின்னம் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.இதில் அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
மேலூர் அருகே அ.வல்லாளபட்டி பேரூராட்சியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் தேர்தல் முகவர்கள் முன்னிலையில் வேட்பாளர்களின் சின்னங்களை பொருத்தும் பணி நடைபெற்றது.
Related Tags :
Next Story