வாணியம்பாடி அருகே தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்


வாணியம்பாடி அருகே தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 12 Feb 2022 12:12 AM IST (Updated: 12 Feb 2022 12:12 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா நேற்று மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட சென்றார். அப்போது வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியம் பெரியகுரும்பதெரு கிராமத்தில் கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிடங்களை பார்வையிட்டு, மாணவர்களிடம் பாடங்கள் குறித்து கேட்டறிந்தார்.

கலெக்டர் பள்ளிக்கு வரும்போது தலைமை ஆசிரியர் அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் கலெக்டரை யார் என்று தெரியாமல் அவரிடம் முன்னுக்குபின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

 அதன்பேரில் மாவட்ட கல்வி அலுவலர், ஆலங்காயம் ஒன்றியம் பெரிய குரும்பத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவில் பணியிடை நீக்க காலத்திலும்  சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை அதே இடத்திலேயே  இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Next Story