ஜோலார்பேட்டை அருகே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது


ஜோலார்பேட்டை அருகே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Feb 2022 12:12 AM IST (Updated: 12 Feb 2022 12:12 AM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையை அடுத்த அண்ணான்டபட்டி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி விஜயா (வயது 52). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதேப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் சந்தீப் (26) என்பவர் விஜயா வீட்டுக்குள் நுழைந்து தனியாக இருந்த விஜயாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகி்றது.
இதனால் விஜயா கூச்சல் போடுள்ளார். அதற்கு கூச்சல் போட்டால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி விட்டு சென்றுள்ளார்.

 இதுகுறித்து விஜயா நேற்று ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து சந்தீப்பை கைது செய்தார்.

Next Story