வேலைஉறுதி திட்ட கணக்குகளை முழுமையாக பதிவு செய்ய வேண்டும். கலெக்டர் உத்தரவு
திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் வேலைஉறுதி திட்ட கணக்குகளை முழுமையாக பதிய வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் வேலைஉறுதி திட்ட கணக்குகளை முழுமையாக பதிய வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
சமூக தணிக்கை
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட சமூக தணிக்கை மாவட்ட அளவிலான உயர்மட்டக் கூட்டம் கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் ஆலங்காயம், ஜோலார்பேட்டை, கந்திலி, மாதனூர். நாட்டறம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் 2016-2017 ஆம் ஆண்டு முதல் 2019-2020-ஆம் ஆண்டு முடிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளின் சமூக தணிக்கை அறிக்கையில் சுட்டிகக்காட்டப்பட்டுள்ள தணிக்கைத்தடை பத்திகள் சரிபார்க்கப்பட்டு மாவட்ட உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் பதிலறிக்கை தயார் செய்து நிவர்த்தி செய்யப்பட்டது.
தணிக்கைத்தடை நிலுவை பத்திகள் பதிவேடுகள் உயர்மட்ட குழுவில் ஒப்புதல் பெற்று முழுமையாக சரிபார்க்கப்பட்டு முடிக்கப்பட்டது.
முழுமையாக பதிய வேண்டும்
கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் செய்யப்படும் பணி விவரங்கள், கணக்குகள் முழுமையாக பதிவு செய்திட வேண்டும். பதிவேடுகள் அனைத்தும் சரியாக பராமரிக்கப்பட வேண்டும். ஊராட்சிகளில் குப்பைகளை அகறற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைகளை தரம்பிரிக்கும் பணிகளை முறையாக செய்ய வேண்டும். குப்பை அள்ளும் பேட்டரி வண்டிகளை பழுது நீக்கி பயன்படுத்த வேண்டும் என ஒன்றிய ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில திட்ட இயக்குனர் செல்வராசு, உதவி இயக்குனர் (தணிக்கை) மு.பிச்சாணடி, உதவி திட்ட அலுவலர் ராமசேகர் குப்தா, மாவட்ட வள அலுவலர் அழகுமுருகன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story