வேலூரில் திராவிட முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


வேலூரில் திராவிட முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Feb 2022 12:12 AM IST (Updated: 12 Feb 2022 12:12 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் திராவிட முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு திராவிட முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் ஜி.எஸ். இக்பால் தலைமை தாங்கினார்.
மாவட்ட இளைஞரணி செயலாளர் முகமதுகான், மாநகர தலைவர் மஹபூப்பாஷா, மாநில இளைஞரணி செயலாளர் முக்தியார் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப் கண்ணியத்தை சீர்குலைத்து, உரிமையை பறிக்க கர்நாடக அரசு நினைப்பதாக கூறி அந்த மாநில அரசையும், இதனை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதில் நூர்முகமத் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story