ஜோலார்பேட்டையில் ரெயிலில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஜோலார்பேட்டையில் ரெயிலில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரேஷன் அரிசியை ரெயில் மூலம் வெளிமாநிலங்களுக்கு கடத்துவதற்காக சிறு சிறு மூட்டைகளாக 26 மூட்டைகளில் ஒரு டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
அதை போலீசார் பறிமுதல் செய்து வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story