ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்பத்திருவிழா


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்பத்திருவிழா
x
தினத்தந்தி 12 Feb 2022 12:40 AM IST (Updated: 12 Feb 2022 12:40 AM IST)
t-max-icont-min-icon

நம்பெருமாள்உபயநாச்சியார்களுடன் தெப்ப உற்சவம் கண்டருளினார்.

ஸ்ரீரங்கம், பிப்.12-
ஸ்ரீரங்கம்ரெங்கநாதர்கோவில்மாசிதெப்பத்திருவிழாவையொட்டி நம்பெருமாள்உபயநாச்சியார்களுடன் தெப்ப உற்சவம் கண்டருளினார்.
மாசி திருவிழா
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்மாசிதெப்பத்திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது.  முதல் நாள் ஹம்ச வாகனத்திலும், 2-ம் நாள் ஹனுமந்த வாகனத்திலும், 3-ம் நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும், 4-ம் நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5-ம் நாள் இரட்டை பிரபை வாகனத்திலும், 6-ம் நாள்யானைவாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தெப்பத்திருவிழாவின் 7-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம்  8-ம் நாளான நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை 3 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேர்ந்தார்.
தெப்பஉற்சவம்
 இரவு 7.15 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் இரவு 7.30 மணிக்கு எழுந்தருளினார். பின்னர் குளத்தின் மைய மண்டபத்தை 3 முறை வலம் வந்துஇரவு9மணிவரைநம்பெருமாள்உபயநாச்சியார்களுடன் தெப்ப உற்சவம் கண்டருளினார். பின்னர் இரவு 9.15 மணிக்கு மையமண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

Next Story