வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 4 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 4 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 12 Feb 2022 12:44 AM IST (Updated: 12 Feb 2022 12:44 AM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

சோமரசம்பேட்டை, பிப்.12-
வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
ஆட்டோ டிரைவர் மனைவி
சோமரசம்பேட்டை அருகே உள்ள நாச்சிகுறிச்சி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் கமாலுதீன். இவரது மனைவி சுமையா தஸ்லீம் (வயது 27). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கமாலுதீன் ஆட்டோ ஓட்டி வந்தார்.
 இதில் அவருக்கு போதிய வருவாய் இல்லாததால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வெளிநாடு சென்றுள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த சுமையா தஸ்லீம் வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார், இதுகுறித்த புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிபழக்கம்
சோமரசம்பேட்டை அருகே உள்ள இனாம் புலியூர் தெற்குமேடு பகுதியை சேர்ந்தவர் மணிவேல் (40). குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் நேற்று முன்தினம் தனது மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அவர் தன்னிடம் பணம் இல்லை எனகூறவே மனம் உடைந்த மணிவேல் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.
இதைகண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவர் தற்கொலை
முசிறி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சுப்பையா (60). இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சித்ரா தனது மூத்த மகன் மாணிக்க மூர்த்தியின் மகளை பராமரித்து வருவதற்காக துறையூரில் வசித்து வருகிறார். சுப்பையா முசிறியில்  தனியாக வாழ்ந்து வந்தார்.
இதனால் மனம் உடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலிமருந்து தின்று...
திருச்சி உறையூர் ராமலிங்கநகரை சேர்ந்தவர் சந்திரன் (65). உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர் எலிமருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story