கிராமத்தை தூய்மையாக வைத்து கொள்ள பொதுமக்கள் உறுதிமொழி
கிராமத்தை தூய்மையாக வைத்து கொள்ள பொதுமக்கள் உறுதிமொழி
திருமங்கலம்
திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் கரிசல்பட்டி. இங்கு தூய்மை பாரத இயக்கம் திட திரவ கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவருடன் சேர்ந்து கிராமத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள உறுதி மொழி எடுத்தனர். முதற்கட்ட பணியாக அந்த கிராமத்தில் உள்ள அனைத்து மக்காத பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை சேகரித்தனர். 106 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அது மறு சுழற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சவுந்தரராஜன், ஊராட்சி மன்ற தலைவர் கோட்டூர் என்ற குருவுலட்சுமி சின்ன வெள்ளையன், திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி, திட்ட ஊக்குனர் கலா அமுதா, பணித்தள பொறுப்பாளர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story