மதுரையில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


மதுரையில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Feb 2022 1:06 AM IST (Updated: 12 Feb 2022 1:06 AM IST)
t-max-icont-min-icon

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசு மற்றும் பா.ஜனதா கட்சியை கண்டித்து மதுரையில் முஸ்லிம் அமைப்பினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசு மற்றும் பா.ஜனதா கட்சியை கண்டித்து மதுரையில் முஸ்லிம் அமைப்பினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹிஜாப் விவகாரம்
கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வரக்கூடாது என கூறப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சார்பில் முனிச்சாலை ஓபுளாபடித்துறை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஹபீபுல்லாக் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில பேச்சாளர் அப்துர்ரகுமான் கலந்து கொண்டு பேசியதாவது:-
தேர்தலை மனதில் வைத்து
மத அடையாளங்களை அணிந்து கொண்டு வரக்கூடாது என்ற காரணத்தை சொல்லி, இஸ்லாமிய மாணவிகளை வகுப்புக்கு வரவிடாமல் தடுக்கிறார்கள். மற்ற மதத்தை சார்ந்தவர்கள் பொட்டு, விபூதி, ருத்ராட்சை, சிலுவை, காப்பு போன்ற அடையாளங்களுடன் வருகின்றனர். 
இது திட்டமிட்டு மக்களை பிரிப்பதற்கான முயற்சி. சீக்கிய குழந்தைகள் தலைப்பாகை அணிவதும், ராணுவத்தில் ஜெனரல் நிலை வரை அதை தொடர்வதும் இன்றுவரை நடந்து கொண்டு தான் இருக்கிறது.
 ஏன் இந்த பாகுபாடு என்பது தெரியவில்லை. கர்நாடகத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு, அடுத்தாண்டு வரும் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு, இதுபோன்று செயல்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அம்ஜத்கான், பொருளாளர் மன்சூர் அகமது, துணை தலைவர் ஜாகீர்உசேன் மற்றும் ெபண்கள் உள்பட ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

Next Story