வாகன சோதனையில் ரூ.53 ஆயிரம் பறிமுதல்
வாகன சோதனையில் ரூ.53 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது
பொன்னமராவதி
தேர்தலைெயாட்டி வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய பணம் மற்றும் பரிசு பொருட்கள் வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறதா? என்று பொன்னமராவதியில் தலைமையிடத்து துணை தாசில்தார் திலகம் தலைமையில், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர் புதுக்கோட்டை எல்லையான கண்டியாநத்தம், வேகுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.53,050-ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story