தோப்பில் கிடந்த 2 மண்டை ஓடுகள்
பந்தநல்லூர் அருகே உள்ள ஒரு தோப்பில் 2 மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பனந்தாள்:
பந்தநல்லூர் அருகே உள்ள ஒரு தோப்பில் 2 மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்டை ஓடுகள்
தஞ்ைச மாவட்டம் திருப்பனந்தாளை அடுத்த பந்தநல்லூர் அருகே உள்ள முழையூர் கிராமத்தில் உள்ள ஒரு ேதாப்பில் அடையாளம் தெரியாத 2 மண்டை ஓடுகள் கிடப்பதாக பந்தநல்லூர் போலீசாருக்கு கிராம நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது அங்கு 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் மண்டை ஓடும், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் மண்டை ஓடும் கிடந்தது.
மண்டை ஓடுகள் அருகே ஆதார் கார்டு மற்றும் உள்ளாடைகள் கிடந்தன. இந்த மண்டை ஓடுகள், ஆதார் கார்டுகள் ஆகியவற்்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை
அங்கு கிடந்த ஒரு ஆதார் கார்டில் அதே ஊரைச்சேர்ந்த ஒரு ஆணின் பெயரும், மற்றொரு ஆதார் கார்டில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள காளி திருமங்கலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பெயரும் இருந்தது.
இதுகுறித்து பந்தநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு கிடந்த மண்டை ஓடுகள் அந்த ஆதார் கார்டில் இருந்தவர்கள்தானா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story