அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்மணிகள் நனைந்து சேதம்


அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்மணிகள் நனைந்து சேதம்
x
தினத்தந்தி 12 Feb 2022 1:41 AM IST (Updated: 12 Feb 2022 1:41 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் பகுதிகளில் பெய்த மழையால் அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்மணிகள் நனைந்து சேதமடைந்துள்ளது.

மெலட்டூர்:
கும்பகோணம் பகுதிகளில் பெய்த மழையால் அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்மணிகள் நனைந்து சேதமடைந்துள்ளது. 
நெல்மணிகள் நனைந்து சேதம்
பாபநாசம் மற்றும் திருகருக்காவூர், மெலட்டூர், இடையிருப்பு, இரும்புதலை உள்பட பல பகுதிகளில் சம்பா நெல் அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அருகில் உள்ள அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர். நேற்று காலை திடீரென  பெய்த மழையில் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் குவித்து வைத்திருந்த நெல் மணிகள் நனைந்து சேதமடைந்தன. இ்தனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். அரசு கொள்முதல்நிலையங்களில் தற்போது அதிகளவில் நெல் குவிந்துள்ளதால் ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்து விட்டு, முன்பதிவு டோக்கன் முறையில் கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கபிஸ்தலம் 
கபிஸ்தலம் பகுதிகளில் பெய்த மழையால் கொள்முதல் செய்வதற்காக கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தது. எனவே நெல் மூட்டைகளில் ஈரப்பதத்தை தளர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும்.  அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதற்கு தகர கொட்டகை அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
அய்யம்பேட்ைட, பாபநாசம்
அய்யம்பேட்டை, பசுபதிகோவில், சூலமங்கலம், சக்கராப்பள்ளி, வழுத்தூர், கணபதி அக்ரகாரம், மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. காவிரி, கொள்ளிடம் ஆற்றுப்படுகைகளில் செயல்பட்டு வரும் செங்கல் சூளை பணிகள் இந்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் சம்பா அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து உள்ளதால், அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story