தி.மு.க. பெண் வேட்பாளரிடம் தங்க சங்கிலி பறிப்பு
அஞ்சுகிராமத்தில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தி.மு.க. பெண் வேட்பாளிடம் 3½ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
அஞ்சுகிராமம்,
அஞ்சுகிராமத்தில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தி.மு.க. பெண் வேட்பாளிடம் 3½ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
தி.மு.க. வேட்பாளர்
அஞ்சுகிராமம் சிவராம புரத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஸ், விவசாயி. இவருடைய மனைவி கலா (வயது50). இவர் தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அஞ்சுகிராமம் பேரூராட்சியில் 4-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார்.
நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இருவரும் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளத்திற்கு உறவினர் திருமணத்திற்காக சென்றனர். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் அஞ்சுகிராமம் நோக்கி புறப்பட்டனர். கணவர் ஜெகதீஸ் மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்ல வேட்பாளர் கலா பின்னால் அமர்ந்திருந்தார்.
நகை பறிப்பு
அஞ்சுகிராமம் பிராந்தநேரி குளக்கரையில் வந்த ேபாது 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்தனர். அவர்கள் திடீரென தம்பதி சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்து தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து, 2 பேர் மோட்டார் சைக்கிளில் இருந்தபடியே கலாவின் கழுத்தில் கிடந்த 5½ பவுன் தங்க சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த கலா நகையை பிடித்து கொண்டு கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க போராடினார். இதில் நகை இரண்டு துண்டுகளாக அறுந்து 2 பவுன் நகை கலா கையில் கிடைத்து. 3½ பவுன் நகை கொள்ளையர்கள் கையில் சிக்கியது. உடனே, அந்த கும்பல் கணவன்-மனைவியை தள்ளிவிட்டு விட்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து கலா அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெஸிமேனகா வழக்குப்பதிவு செய்து தி.மு.க. வேட்பாளரிடம் நகை பறித்த 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story