சூலமங்கலம் முத்துமுனீஸ்வரர் கோவில் பால்குட விழா
சூலமங்கலம் முத்துமுனீஸ்வரர் கோவில் பால்குட விழா நடந்தது.
அய்யம்பேட்டை:
அய்யம்பேட்டை அருகே சூலமங்கலம் கிராமத்தில் முத்துமுனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சந்தனகாப்பு மகோத்சவ விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் சிறப்பு மண்டகப்படி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி அய்யம்பேட்டை மதகடி பஜார் குடமுருட்டி ஆற்றில் உற்சவமூர்த்தி சிம்ம வாகனத்தில் எழுந்தருள, அங்கிருந்து பால்குடம், பன்னீர் குடம், பறவை காவடி, அலகு காவடி ஆகியவை புறப்பட்டு கோவிலுக்கு வந்தடைந்தது. அங்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது. மாலை சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் சூலமங்கலம், அய்யம்பேட்டை, செருமாக்கநல்லூர், அரிய மங்கை கிராமமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story