தி.மு.க.- அ.தி.மு.க. கட்சிகளுடன் எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது; கோபியில் சீமான் பேட்டி
தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.
கடத்தூர்
தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.
அறிமுக கூட்டம்
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், பா.ம.க. கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய வேட்பாளர்களை ஆதரித்தும், அறிமுகம் செய்து வைத்தும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் கோபியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டணி அமைக்க மாட்டோம்
இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கோபி நகராட்சி பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வேறு கட்சிகளுடன் கூட்டணி வைப்பது நாம் தமிழர் கட்சியின் கொள்கை முடிவு அல்ல. நாங்கள் மக்களை நம்பித்தான் இயக்கத்தை தொடங்கினோம். எனவே பெரிய கூட்டணியே நாங்கள் தான். பா.ஜ.க., காங்கிரஸ். மற்றும் தமிழகத்தில் தி.மு.க. அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் எந்த காலத்திலும் கூட்டணி அமைக்க மாட்டோம். தேர்தலில் நான் தோற்று போகவில்லை. மக்கள் தான் தோற்று விட்டனர். இதனால் எனக்கு வலி மட்டுமே உள்ளது.
திம்பம் மலைப்பாதை
நாங்கள் வெற்றியையும், தோல்வியும் சமமாக கருதுகிறோம். எனவே இதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்.
எங்களை போன்று தனித்து போட்டியிடும் ஏதாவது ஒரு அரசியல் கட்சிகளை கூற முடியுமா?. திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை விலக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story