புளியங்குடியில் வாகனம் மோதி புதுமாப்பிள்ளை பலி திருமணமான 6 மாதத்தில் பரிதாபம்


புளியங்குடியில்  வாகனம் மோதி புதுமாப்பிள்ளை பலி திருமணமான 6 மாதத்தில் பரிதாபம்
x
தினத்தந்தி 12 Feb 2022 2:43 AM IST (Updated: 12 Feb 2022 2:43 AM IST)
t-max-icont-min-icon

வாகனம் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்

புளியங்குடி:
புளியங்குடியில் வாகனம் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.
செல்போன் கடை ஊழியர்
தென்காசி மாவட்டம் புளியங்குடி டி.என்.புதுக்குடியைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவருடைய மகன் பொன்ராஜ் (வயது 26). இவர் புளியங்குடியில் உள்ள தனியார் செல்போன் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த லாவண்யா என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
வாகனம் மோதியது 
நேற்று முன்தினம் காலையில் பொன்ராஜ் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். பின்னர் இரவில் வேலை முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
புளியங்குடி டி.என்.புதுக்குடி பள்ளிவாசல் பஸ் நிறுத்தம் அருகில் வந்தபோது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் திடீரென்று பொன்ராஜின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
பரிதாப சாவு 
இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த பொன்ராஜிக்கு புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை ேமல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே பொன்ராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகன டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். காதல் திருமணம் செய்த 6 மாதங்களில் புதுமாப்பிள்ளை விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story