திருமணம் செய்து வைக்காததால் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியை கொன்ற மகன்


திருமணம் செய்து வைக்காததால் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியை கொன்ற மகன்
x
தினத்தந்தி 12 Feb 2022 3:02 AM IST (Updated: 12 Feb 2022 3:02 AM IST)
t-max-icont-min-icon

ராய்ச்சூர் அருகே திருமணம் செய்து வைக்காததால் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு:

திருமணம் செய்யாததால் தகராறு

  ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகா கெப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜப்பா(வயது 75). இவரது மகன் ஜெகதீஸ்(35). பசவராஜப்பா ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஆவார். ஜெகதீசுக்கு இன்னும் திருமணமாகவில்லை.

  தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கூறி தந்தை பசவராஜப்பாவுடன் அவர் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவதுர்காவில் இருந்து ராய்ச்சூர் டவுனில் உள்ள தனது மகள் வீட்டுக்கு பசவராஜப்பா தன்னுடைய மனைவியுடன் வந்திருந்தார்.

தலையில் கல்லைப்போட்டு...

  அங்கு வைத்து அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டு சென்றார். கோசாலே ரோட்டில் அவர் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஜெகதீஸ் தனது தந்தையுடன் தகராறு செய்துள்ளார். பின்னர் அவரை அடித்து, உதைத்து கீழே தள்ளியதுடன், சாலையோரம் கிடந்த பெரிய கல்லை எடுத்து பசவராஜப்பாவின் தலையில் போட்டதாக கூறப்படுகிறது.
இதில், தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

  உடனே அங்கிருந்து ஜெகதீஸ் ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் மார்க்கெட் போலீசார் விரைந்து வந்து பசவராஜப்பாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது திருமணம் செய்து வைக்காததாலும், சொத்தை பிரித்து கொடுக்காததாலும் பசவராஜப்பாவை, ஜெகதீஸ் கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து ராய்ச்சூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீசை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story