காட்டுயானையை விரட்டியடித்த வளர்ப்பு நாய்கள்


காட்டுயானையை விரட்டியடித்த வளர்ப்பு நாய்கள்
x
தினத்தந்தி 12 Feb 2022 3:10 AM IST (Updated: 12 Feb 2022 3:10 AM IST)
t-max-icont-min-icon

ஹாசன் மாவட்டத்தில் காட்டுயானையுடன் சண்டையிட்டு அதனை வனப்பகுதிக்குள் வளர்ப்பு நாய்கள் விரட்டியடித்தன.

ஹாசன்:

காட்டுயானை

  ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா மத்தூர் கிராமத்தில் காட்டுயானையுடன், வளர்ப்பு நாய்கள் சண்டையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தூர் கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது.

  நேற்று காலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டுயானை கிராமத்திற்குள் புகுந்தது. பின்னர் அது அங்குள்ள ஒரு தோட்டத்திற்குள் நுழைய முயன்றது. அப்போது அங்கு வந்த அந்த தோட்ட உரிமையாளரின் 4 வளர்ப்பு நாய்கள் அந்த காட்டுயானையை தோட்டத்திற்குள் நுழைய விடாமல் வழிமறித்து குரைத்தன.

சமூக வலைத்தளங்களில் வைரல்

  இதனால் ஆக்ரோஷம் அடைந்த காட்டுயானை, அந்த நாய்களுடன் மல்லுக்கட்டியது. பின்னர் அந்த காட்டுயானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

  இந்த சம்பவத்தை மத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி காண்போரை சிலிர்க்க வைக்கிறது.

Next Story