கடையநல்லூரில் ஆர்ப்பாட்டம்: 916 பேர் மீது வழக்கு


கடையநல்லூரில் ஆர்ப்பாட்டம்: 916 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 12 Feb 2022 3:18 AM IST (Updated: 12 Feb 2022 3:18 AM IST)
t-max-icont-min-icon

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 916 பேர் மீது வழக்குப்பதிவு

கடையநல்லூர்:
கர்நாடகத்தில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்ததை கண்டித்து கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் அமைப்பின் சார்பில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். ஆனாலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அப்துல் ஸலாம் மற்றும் 800 பெண்கள் உள்பட 916  பேர் மீது கடையநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குப்பதிவு செய்தார்.

Next Story