திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோவில் படிக்கட்டில் தவறி விழுந்த பள்ளி மாணவன் சாவு


திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோவில் படிக்கட்டில் தவறி விழுந்த பள்ளி மாணவன் சாவு
x
தினத்தந்தி 12 Feb 2022 7:08 AM IST (Updated: 12 Feb 2022 7:08 AM IST)
t-max-icont-min-icon

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோவில் படிக்கட்டில் தவறி விழுந்த பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

திருக்கழுக்குன்றம்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சேத்துப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம். இவரது மகன் மணிகண்டன் (வயது 14). அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

விசேஷ நாட்களில் மணிகண்டன் சமையல் வேலைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு சமையல் வேலைக்காக தனது நண்பர்களுடன் சென்றிருந்தான்.

பின்னர் நேற்று மாலை வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு தனது நண்பர்களுடன் மலைப்படிகட்டுகளில் இறங்கி வந்தான். அப்போது மணிகண்டன் கால் தவறி விழுந்தான்.

இதில் மணிகண்டனின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக மணிகண்டனை திருக்கழுக்குன்றம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் மணிகண்டனை பரிசோதித்து பார்த்து விட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவில் நிர்வாகத்தின் சார்பில் கோவிலுக்கு செல்லும் பாதையில் பாதுகாப்பு வாசகங்கள் எதுவும் வைக்காமல் செயல்படுவதால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுகிறது என்றும் இதனால் பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய பலகைகள் ஆங்காங்கே வைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story