ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக ரூ.32 ஆயிரம் அபேஸ்


ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக ரூ.32 ஆயிரம் அபேஸ்
x
தினத்தந்தி 12 Feb 2022 4:44 PM IST (Updated: 12 Feb 2022 4:44 PM IST)
t-max-icont-min-icon

ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக ரூ.32 ஆயிரம் அபேஸ் செய்த வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.

கமுதி, 
கமுதியில் பஸ் நிலையம் அருகே அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இதில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் மனைவி வசந்தா (வயது42) பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். கார்டை கொடுங்கள் நான் எடுத்து தருகிறேன் என்று கூறி, தனது கையில் இருந்த வேறு ஒரு ஏ.டி.எம். கார்டை பயன் படுத்தி இதில் பணம் இல்லை என்று கூறிவிட்டு, கையில் வைத்திருந்த அந்த ஏ.டி.எம். கார்டை வசந்தாவிடம் கொடுத் துள்ளார். பின்னர் வசந்தா ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி அதில் இருந்த ரூ.32 ஆயிரம் பணத்தை வாலிபர் அபேஸ் செய்தார். தனது கணக்கில் பணம் எடுக்கப் பட்டதை அறிந்த வசந்தா கமுதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை தேடி வருகின்றனர்.

Next Story