வீடு, வீடாக பூத் சிலிப் வினியோகம்


வீடு, வீடாக பூத் சிலிப் வினியோகம்
x
தினத்தந்தி 12 Feb 2022 6:19 PM IST (Updated: 12 Feb 2022 6:19 PM IST)
t-max-icont-min-icon

வீடு, வீடாக பூத் சிலிப் வினியோகம்

ஊட்டி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 15 உள்ளாட்சி அமைப்புகளில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 430 பேர், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 244 பேர், மூன்றாம் பாலினத்தவர் 7 பேர் என மொத்தம் 3 லட்சத்து 18 ஆயிரத்து 681 பேர் வாக்களிக்க உள்ளனர். இதையொட்டி வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியது. 

ஊட்டி நகராட்சியில் வீடு, வீடாக சென்று பூத் சிலிப் வழங்கப்பட்டு வருகிறது. அதில் வாக்காளரின் புகைப்படம், பெயர், முகவரி, சம்பந்தப்பட்ட வார்டு, வாக்குச்சாவடி போன்ற விவரங்கள் அடங்கி உள்ளது. இதற்காக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் மற்ற 14 உள்ளாட்சி அமைப்புகளிலும் பூத் சிலிப் வினியோகம் செய்யும் பணி நடந்து வருகிறது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story