சாரல் மழையால் கடும் பனி மூட்டம்
சாரல் மழையால் கடும் பனி மூட்டம்
கோத்தகிரி
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று அதிகாலை முதல் லேசான சாரல் மழை பெய்து இருந்தது. மேலும் கடும் பனி மூட்டம் நிலவியதுடன், குளிரான காலநிலை ஏற்பட்டது. இதற்கிடையில் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில் கடும் பனி மூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மேலும் வாகனங்களின் முகப்பு விளக்கை எரிய விட்டவாறு மெதுவாக இயக்கி சென்றனர். மாணவ-மாணவிகள் கம்பளி ஆடைகளை அணிந்தவாறு பள்ளிகளுக்கு சென்றதை காண முடிந்தது.
கடும் குளிர் நிலவியதால் பச்சை தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் பணிக்கு செல்லவில்லை. மேலும் அத்தியாவசிய பொருட்களை வாங்க கோத்தகிரி நகருக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதை உணர முடிந்தது. கோத்தகிரி பகுதியில் மாறி வரும் காலநிலையால் தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்து இருக்கின்றனர்.
Related Tags :
Next Story