வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் பாரதப்பிரதமர் சாலைகள் மேம்பாடு திட்டத்தில் மேல்ஆலத்தூர்-நத்தம் கூட்ரோடிலிருந்து ஒலக்காசி செல்லும் சாலை, எர்த்தாங்கல் கிராமத்திலிருந்து அக்ராவரம் செல்லும் சாலை, அக்ராவரம் கிராமத்தில் இருந்து பூங்குளம் செல்லும் சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது இந்த பணிகளை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார்.
மேல்ஆலத்தூர் ஊராட்சி பட்டு-நத்தமேடு இணைப்பு பாலம் வெள்ளப்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்டது பொதுமக்கள் ஆற்றை கடப்பதற்காக தற்போது அமைக்கப்பட்டு வரும் தற்காலிக பால பணிகளையளும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மேல்ஆலத்தூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டு வரும் பண்ணைகுட்டை, மாட்டுக் கொட்டகை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நடைபெறும் கால்வாய் தூர்வாரும் பணிகள் மற்றும் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் பணிகளை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது உதவி கலெக்டர் தனஞ்செயன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செந்தில்வேல், ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர் மஞ்சுநாதன், தாசில்தார் லலிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.யுவராஜ், எஸ்.சுமதி, மேல்ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா ராஜ்குமார், துணைத்தலைவர் ராஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்
==========
Related Tags :
Next Story